பெயர் காரணம்
திரு+ குறள் =திருக்குறள். திரு என்னும் சொல் பெருமை. சிறப்பு மேன்மை என்னும் பல பொருள்களை உணர்த்தும். குறள்- இரண்டடி வெண்பா. சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல்.ஆதலின் இப்பெயர் பெற்றது. குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் கருவியாகு பெயராயிற்று. திருக்குறள் அடையடுத்த ஆகுபெயர் ஆகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் என போற்றப்படுகிறது. இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல்மிக்க அறக்கருத்துக்கள் மேன்மை பெற்று விளங்குகிறது. பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.
உலக பண்பாட்டிற்கு தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி யு போப் ஆவார். திருக்குறளைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
திருக்குறள்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது.காமத்துப்பால் இன்பத்துப்பால் என்றும் அழைக்கப்படும். திருக்குறள் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என 1330 குறட்பாக்களை கொண்டது.
அறத்துப்பால்
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல்,ஊழியல் என நான்கு இயல்களைக் கொண்டது. இதில் 38 அதிகாரங்கள் உண்டு. ஆக மொத்தம் 380 குறட்பாக்களை கொண்டது.
பொருட்பால்
அரசியல்,அங்கவியல்,ஒழிபியல் என மூன்று இயல்களையும் 70 அதிகாரங்களையும் 700 குறட்பாக்களையும் கொண்டது.
இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால்
களவியல், கற்பியல் என இரண்டு இயல்களும் 25 அதிகாரங்கள் 250 குறட்பாக்களை கொண்டது.
திருக்குறள் நூலின் பெருமைகள்
திருக்குறள் உலகப்பொதுமறை, அற இலக்கியம், தமிழர் திருமுறை, மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துரைத்த நூல். ஆங்கிலம், இலத்தீன்,கிரேக்கம் முதலான உலக மொழிகள் பலவற்றிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் வேறு பெயர்கள்
முப்பால்,உத்திரவேதம்,தெய்வ நூல், திருவள்ளுவர்,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, உலகப்பொதுமறை
உரையாசிரியர்கள்
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவி பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் உரை எழுதியுள்ளனர். இவர்களின் உரைகளில் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் திருவள்ளுவர், பெற்றோர்: ஆதி,பகவன் , ஊர் மயிலை (மயிலாப்பூர் ) சிலர் மதுரை என்று கூறுவோரும் உண்டு.காலம் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு இவருடைய காலம் கிமு 31 (தைத் திங்கள் இரண்டாம் நாள் ) என கருத்தில் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
ஆசிரியரின் வரலாறு
திருவள்ளுவரின் உண்மையான வரலாறு கிடைக்கவில்லை. இவர் ஆதி பகவன் என்னும் பெற்றோருக்குப் பிறந்தார். வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டதால் இயற்பெயர் வழக்கற்று வள்ளுவர் என்ற பெயர் பெற்றார் . அரசருக்கு அந்தரங்க ஆலோசகர் பதவியில் பொறுப்பாக செயல்பட்டதால் இவர் இயற்பெயர் மறைந்து வள்ளுவர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் என்பர் சிலர். மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள் வாசுகியை மணந்து இல்லறம் நடத்தியவர். நெசவுத் தொழில் செய்து வந்தனர் என்பர். இவருக்கு மாணவர் பலர் இருந்தனர். இவரியற்றிய திருக்குறளை மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் முயற்சி மேற்கொண்டார் என்பர்.சிலர் உலகம் போற்றும் திருக்குறளை இயற்றி மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் என்று கூறுபவர்களும் உள்ளனர். வள்ளுவர் தம் நூலில் குறிப்பிட்ட மொழியையோ, மொழியினரையோ இறைவனையோ, சமயத்தையோ பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
வள்ளுவருக்கு வழங்கும் சிறப்பு பெயர்கள்
திருவள்ளுவ நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், செந்நாப்போதார், பெருநாவலர்,மாதானுபங்கி, பொய்யில் புலவர் என பல பெயர்களால் பாராட்டுகின்றார்.
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் தொடர்கள்
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி ‘ பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’- பழமொழிகள்.
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ – இடைக்காடனார்.
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ‘- அவ்வையார்
“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் “- திருவள்ளுவமாலை இறையனார்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதியார்.
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”- பாரதிதாசன்.
திருவள்ளுவமாலை என்னும் நூல் திருக்குறளின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது. எல்லா புலவர்களாலும் மேற்கோளாக எடுத்தாளப்படும் பெருமை மிக்கது திருக்குறள்.
திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தார். திருக்குறளை ஜெர்மன் மொழியில் டாக்டர் கிரால் மொழிபெயர்த்தார். திருக்குறளை பிரெஞ்சு மொழியில் ஏரியல் மொழிபெயர்த்தார்.
திருக்குறள் 107 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பொது நெறி காட்டிய புலவர் திருவள்ளுவர். திருக்குறளில் பாயிரம் என்பது முதல் நான்கு அதிகாரங்களை குறிக்கும். பாயிரம் என்பதற்கு முன்னுரை என்று பொருள். முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்லது வள்ளுவர் பார்வை. இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பு. மூன்றாவது அதிகாரம் நீத்தார் பெருமை. நான்காவது அதிகாரம் அறன்வலியுறுத்தல்.
திருக்குறளில் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை. திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள்-அனிச்சம், குவளை.திருக்குறளில் இடம்பெற்ற பழம் நெருஞ்சிப்பழம். திருக்குறளில் இடம்பெற்ற இரு மரங்கள் பனை மற்றும் மூங்கில். திருக்குறளில் இடம்பெறாத எழுத்து ஓள. திருக்குறளில் இடம்பெறாத எண் 9. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றையும் கொண்ட முப்பால் திருக்குறள் ஆகும். திருக்குறள் ஒன்பது இயல்களைக் கொண்டது. திருக்குறள் குறள் வெண்பாவால் இயற்றப்பட்ட முதல் நூலாகும். முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் ஆக மொத்தம் ஏழு சீர்களைக் கொண்டது திருக்குறள்.
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் முதன்முதலாக திருக்குறள் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார். மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை திருக்குறள்.
திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மாந்தர்க்கோ ஒரு நிற த்தார்கோ ஒரு மொழியார்கோ ஒரு நாட்டுக்கு உரியது அன்று பத்து மணிக்கு உலகத்துக்கு பொது என்று கூறியவர் திரு வி கல்யாண சுந்தரனார்.