தமிழக வரலாறும் தமிழகத்தின் சிறப்புகளும்

ADVERTISEMENT

தமிழக வரலாறு

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆங்கிலேயர் ஆட்சியில் தென் நாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்றபின் தமிழ் மொழி பேசப்படும் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. 1967 பிப்ரவரி 6 ஆம் நாள் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சியினுடைய பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இவரது ஆட்சியில் 1919ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள்

தமிழக அரசு சின்னம் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம். மாநில விலங்கு நீலகிரி வரையாடு. மாநில மலர் செங்காந்தள். தமிழக மாநில பறவை மரகத புறா. மாநில மரம் பனை மரம். மாநில விளையாட்டு கபடி. மாநில பாடல் தமிழ் தாய் வாழ்த்து மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை இயற்றியது நீராரும் கடலுடுத்த.

தமிழகத்தின் சிறப்புகள்

தமிழகத்தின் முதல் முதல்வர் சுப்பராயலு ரெட்டியார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வர் ராஜாஜி அவர்கள். தமிழ்நாட்டினுடைய முதல் பெண் முதலமைச்சர் திருமதி ஜானகி ராமச்சந்திரன். தமிழக வரலாற்றில் மிகக் குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் திருமதி ஜானகி ராமச்சந்திரன்.
மெட்ராஸ் மாகாணத்தின் முதல் கவர்னர் ஜார்ஜ் மெகார்ட்னி. தமிழகத்தின் முதல் கவர்னர் சுதந்திரத்திற்குப் பிறகு ஆர்ச்சிபால் எட்வர்ட் நை. தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் கிருஷ்ணகுமார் சிங் ஜி பவசிங்ஜி. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் செல்வி பாத்திமா பீவி. தமிழகத்தின் மிக நீண்ட காலம் கவர்னராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. தமிழகத்தின் மிக குறுகிய காலம் கவர்னராக இருந்தவர்.

தமிழக முக்கிய தகவல்கள்

தமிழகத்தின் மிகப் பழமையான அணை கல்லணை. தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச்சிகரம் சிகரம். தொட்டபெட்டா. தமிழகத்தின் மிக நீளமான ஆறு காவிரி ஆறு. தமிழகத்தின் மிகப்பெரிய அணை மேட்டூர் அணை. தமிழகத்தின் மிக நீளமான கடற்கரை சென்னை மெரினா கடற்கரை. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வைணு பாப்பு தொலைநோக்கி காவலூர்.
தமிழக மாவட்டத்தின் அடைமொழிகள்
இந்தியாவின் தென் நில எல்லை கன்னியாகுமரி. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர். சரித்திரம் உறையும் பூமி சிவகங்கை. தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயில் சென்னை. தமிழகத்தின் அரிசி கிண்ணம் தஞ்சாவூர். தமிழகத்தின் தோட்டப்பயிர் பூமி தர்மபுரி. தமிழகத்தின் புனித பூமி ராமநாதபுரம். தமிழகத்தின் மஞ்சள் நகரம் ஈரோடு. தமிழகத்தின் நெசவாளர்களின் வீடு கரூர். மாம்பழ நகரம் சேலம். தமிழகத்தின் ஏரிகளின் மாவட்டம் செங்கல்பட்டு. தமிழகத்தின் ஆலய நகரம் அல்லது கோவில்களின் நகரம் காஞ்சிபுரம். கூடல் நகர் மதுரை. தமிழகத்தின் பூட்டு நகரம் திண்டுக்கல். மலைக்கோட்டை நகரம் திருச்சி. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு திருநெல்வேலி. தமிழ்நாட்டின் பின்னலாடை நகரம் திருப்பூர். தமிழ்நாட்டின் நுழைவாயில் தூத்துக்குடி. துறைமுக நகரம் முத்து நகரம் தூத்துக்குடி. தமிழகத்தின் சமய நல்லிணக்க பூமி நாகப்பட்டினம். தமிழகத்தின் இயற்கை விரும்பிகளின் பூமி தேனி. தமிழகத்தின் முட்டை நகரம் நாமக்கல். தமிழகத்தின் மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது நீலகிரி. தமிழகத்தின் உறங்கா நகரம் மதுரை. தமிழகத்தின் வியாபார நகரம் விருதுநகர். தமிழகத்தின் கோட்டைகளின் நகரம் வேலூர். எலுமிச்சை நகரம் புளியங்குடி. தென் இந்தியாவின் ஸ்பா குற்றாலம். ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. குட்டி இங்கிலாந்து தளி. தென்னிந்தியாவின் திரிவேணி கூடுதுறை பவானி. தென்னிந்தியாவின் காசி -ராமேஸ்வரம். தமிழகத்தின் சின்ன ஜெருசலேம் மணப்பாடு புனித சிலுவை தேவாலயம். ஏலக்காய் நகரம் போடி. கிழக்கின் டிராய் செஞ்சிக்கோட்டை. பருத்தி நகரம் ராஜபாளையம். குட்டி ஜப்பான் சிவகாசி.

ADVERTISEMENT

 தமிழகத்தின் மிக நீண்ட வரலாறு

தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சங்ககாலம்.கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும். சங்க கால மன்னர்கள் சேர சோழ பாண்டிய மரபைச் சேர்ந்தவர்கள். காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை பாசன விவசாயத்தை பின்பற்றிய சமுதாயத்தை உள்ளடக்கிய சோழ அரசு செயல்பட்டது உணர்த்துகிறது. சோழ அரசின் தலைநகர் உறையூர். சங்க அரசர்களில் சேரன் செங்குட்டுவன் கரிகால்சோழன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சேர சோழ படைகளை தலையாலங்கானம் தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகில் தோற்கடித்த தால் பாண்டிய நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான். பாண்டியனின் தலைநகர் மதுரை.

இவர்களைப் போன்று பாரி,காரி, ஓரி, நல்லி,பேகன், ஆய், அதியமான் போன்ற சங்ககால குறுநில மன்னர்களும் இருந்தனர். சங்க காலத்தில் பிராமணர்,சத்திரியர், வணிகர், வேளாளர் என்று நான்கு வகை வருணங்கள்   மட்டுமே இருந்ததாக தொல்காப்பியம் தெரிவிக்கின்றது.  முசிறி தொண்டி பூம்புகார் கொற்கை ஆகியன முக்கிய துறைமுகங்கள் ஆகும். தமிழ் வரலாற்றின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்டது களப்பிரர் காலம். களப்பிரர் காலம் கிபி 250 முதல் 550 க்கும் இடைப்பட்ட காலம் என அழைக்கப்படுகிறது. களப்பிரர் காலத்தில் பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்று தமிழகத்தில் விளங்கின.

 தமிழக வரலாற்றில் பல்லவர்கள் காலம்

தொண்டை மண்டலத்தின் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் பல்லவர்கள்.  பிராகிருத மொழியில் சாசனங்களை வெளியிட்டனர்.  சமஸ்கிருத மொழியிலும் சாசனங்களை வெளியிட்டனர்.  இவ்வாறாக பல்லவர்கள் இருமொழி பிரிவாக காணப்பட்டார்கள். விஜய ஸ்கந்த பெருமானும் சிவஸ்கந்தவர்மன்  பிராகிருத மொழி பிரிவைச் சார்ந்த புகழ்பெற்ற பல்லவ மன்னர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் சாசனம் வெளியிட்ட குறிப்பிடத்தக்க பல்லவ மன்னன் விஷ்ணு குப்தன். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சாதனங்களை வெளியிட்ட மூன்றாம் பிரிவைச் சார்ந்த மிகச்சிறப்பான பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆவார். சிம்மவிஷ்ணு சோழர் ஆதிக்கத்தை வேருடன் களைந்து கறப்பதையும் பாண்டியர்களின் வென்று பல்லவ பேரரசை நிறுவினார்.

தமிழக வரலாற்றை தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர் காலத்தில் தான் தொடங்குகின்றன.  கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏறத்தாழ கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் காணப்படுகிறது. பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செப்பு பட்டயங்கள் சில காணப்பட்டன.அவற்றுள் அவற்றுள் இரண்டாம் சிம்மவர்மன் இல் ஆறாம் ஆட்சியாண்டில் வெளியிட்ட பள்ளன் கோவில் செப்புப்பட்டயங்கள் முதன்முதலாக வடமொழியும் தமிழும் கலந்தவை ஆகும். சோழப்பேரரசு காலத்தில் தோன்றிய செப்பேடு சாசனங்கள் மிகப்பெரியவை அவற்றில் கூறப்படும் மெய்க்கீர்த்திகள் மிக விரிவானவை இக்கால செப்பேடுகளில்  மாபெரும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு ஆகும். செப்பேடுகள் பொதுவாக வாழ்த்து பாடல்களுடன் தொடங்கின அதைத் தொடர்ந்து கொடை அளித்தவரின் மெய்க்கீர்த்தி அவரது பண்டைய அரச பரம்பரையின் வரலாறு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதற்குப்பின் நன்கொடையின் முழுவிவரமும் நன்கொடை பெறுபவரின் முழு பெயரும் வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன.

 பண்டைய தமிழ் அரசுகள்

தமிழகத்தின் தெளிவான வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. சங்கம் என்ற சொல்லுக்கு கழகம் என்று பொருள். சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு. சங்க இலக்கியங்களுள் பழமையானது தொல்காப்பியம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம். களப்பிரர் காலத்தில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றின.

ADVERTISEMENT

 தமிழகத்தின் தொல்லியல் சான்றுகள்

கல்வெட்டுகள் அகழ்வாய்வுகள் நாணயங்கள் இவை யாவுமே தொல்லியல் சான்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. அது கும்பா கல்வெட்டு காரவேலர் உடையது.  பழங்கால தமிழ் பிராமி எழுத்துக்கள் பற்றி அறிய உதவும் கல்வெட்டு கழுகுமலை கல்வெட்டுகள். தமிழக அரசுகளைப் பற்றி தெரிய உதவும் கல்வெட்டுகள் அசோகர் மற்றும் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு. திருக்கோவிலூர் கல்வெட்டு குறுநில மன்னர்களைப் பற்றியும் தமிழ் புலவர் கபிலரின் துயரமான முடிவைப் பற்றியும் கூறுகிறது. தமிழ் மன்னர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர்.

 

 

 

 

ADVERTISEMENT

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *