தமிழ் மொழி வளர்த்த சான்றோர்கள்

ADVERTISEMENT

மறைமலை அடிகள்

இவரின் இயற்பெயர் வேதாசலம். தந்தையின் பெயர் சொக்கநாத பிள்ளை தாயின் பெயர் சின்னம்மை. இவரின் தமிழாசிரியர் நாராயணசாமி. இவரின் தமிழ்ச் சித்தாந்த ஆசிரியர் சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயக்கர்.

தமிழில் பண்டிதர் திறனாய்வாளர் என்ற பரம்பரையை துவக்கி வைத்தவர் இவரே. மறைமலையடிகள் தமிழ் கடல் என்று அழைக்கப்பட்டவர். மறைமலை அடிகள் சித்தாந்த தீபிகை என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருந்தார். இவர் அறிவுக்கடல் அதாவது ஞானசாகரம் என்ற இதழை துவக்கினார். 1905 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமரசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

மறைமலை அடிகள் இயற்றிய செய்யுள் நூல்கள்

மறைமலை அடிகளார் பாமினி கோவை, திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தர காஞ்சி ஆக்கம்.

மறைமலை அடிகள் எழுதிய கட்டுரை நூல்கள்

ADVERTISEMENT

இந்தி பொது மொழியா? மறைமலை அடிகளார் அறிவுரைக் கோவை, மறைமலை அடிகளார் உரை மணி கோவை, மறைமலையடிகளார் சிந்தனைக் கட்டுரைகள், இளைஞர்களுக்கான இன்றமிழ் அறிவுரைக் கொத்து

மறைமலை அடிகளார் எழுதிய நாடக நூல்கள்

சாகுந்தலம்,அம்பிகாபதி அமராவதி, ஆராய்ச்சி நூல்கள், வாழ்வியல் ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, மறை பொருளியல் ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, கால வரலாற்று ஆராய்ச்சி, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, திருக்குறள் ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறு ஆகிய நாடக நூல்களை இயற்றினார்.

பரிதிமாற் கலைஞர்

இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி, இவர் பிறந்த ஊர் விளாச்சேரி. தந்தையின் பெயர் கோவிந்த சிவனார். தாயின் பெயர் லட்சுமி அம்மாள். பிறந்த ஆண்டு 1870 ஜூலை மாதம். பரிதிமாற்கலைஞரின் வடமொழி ஆசிரியர் கோவிந்து சிவனார்  (தந்தை ),பரிதிமாற்கலைஞரின் தமிழ் மொழி ஆசிரியர் மகாவித்துவான் சபாபதி அவர்.இவர் பயின்ற கல்லூரி சென்னை கிருத்துவக் கல்லூரி. தமிழ் படிக்கும் மாணவர்களை இயற்றமிழ் மாணவர் என பெயரிட்டு அழைத்தவர் பரிதிமாற்கலைஞர். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய அவர்களுள் இவரும் ஒருவர். பாஸ்கர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர் சுவாமிநாத ஐயர் ராகவன் ஆகியோர் கொண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.

யாழ்ப்பாணம் தீவை தாமோதரனார் திராவிட சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் சிறப்பித்து அழைத்தார். பரிதிமாற்கலைஞர் தாம் இயற்றிய தனிப்பாசுரத் தொகை என்னும் நூலில் பெற்றோர் இட்ட வடமொழிப் பெயரை மாற்றி பரிதிமாற் கலைஞர் என பெயர் சூட்டிக் கொண்டார் இதனை ஜி யு போப் மொழிபெயர்த்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழ் சொற்களோடு வடமொழிச் சொற்கள் கலந்து எழுதுவது மணிப்பிரவாள நடை என்று பெயர். இதனை மணியும் பவளமும் கோத்த மாலை போலாகும் என்று கூறினார். ஆனால் பரிதிமாற் கலைஞர் தமிழ் மணியோடு பவளத்தைப் போல செந்நிறம் உடைய மிளகாய் பழத்தை சேர்த்து மாலை போன்று உள்ளது என்று இதனை ஏற்கவில்லை.

பரிதிமாற் கலைஞர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்றபோது முதல்வராக இருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் மில்லர் டென்னிசன் எழுதிய ஆர்தரின் இறுதி என்ற பாடம் நடத்திய போது படகை நகர்த்தும் துடிப்பு களுக்கு ஊவமையாக பறவைகளின் இறக்கையை ஒப்பிடுவது குறித்து பேசும்போது பரிதிமாற்கலைஞர் இவ் உவமை 12-ஆம் நூற்றாண்டில் கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் விடுநனிகடிது  என்ற பாடலில் இவ்வுவமை குறிப்பிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் 1902ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தமிழைப் பாட மொழியில் இருந்து விலக்கி வடமொழி கொண்டுவரும் திட்டம் கைவிடப்பட்டது. பரிதிமாற் கலைஞர் மூசி பூர்ணலிங்கம் தின நாள் தொடங்கி வைக்கப்பட்ட ஞானபோதினி என்ற இதழை நடத்தினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் இதழில் செம்மொழி பற்றிய கட்டுரைகளை எழுதினார்.

பரிதிமாற்கலைஞரின் முக்கிய படைப்புகள்

ரூபாவதி, பாவலர் விருந்து, மதிவாணன்,தனிப்பாசுரத் தொகை, சித்திர கவி விளக்கம், தமிழ் மொழியின் வரலாறு,தமிழ் புலவர் சரித்திரம்,ஸ்ரீ மானிய சிவனார் சரித்திரம்,மானவிஜயம்,முடிவுறாத பிரசுரங்கள், நாடகவியல்,தமிழ் வியாசங்கள், கலாவதி.

திரு.வி. க

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர் திருவிக அவர்கள் ஆவார். இவருடைய பிறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. திருவிக அவர்களின் தந்தையார் பெயர் திருவாரூர் விருதாச்சலம். திருவிக அவர்களின் தாயார் பெயர் சின்னம்மையார். திருவிக தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் தொழிலாளர் தலைவராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் அரசியல் தலைவராகவும் இருந்துள்ளார். திருவிக நவசக்தி இதழை நடத்தினார்.

ADVERTISEMENT

திருவிக அவர்களின் நூல்கள்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்தென்றல் உரிமை வேட்கை பொதுமை வேட்டல் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். திரு வி கவின் உடைய சொற்பொழிவுகளை தமிழ்தென்றல் பத்திரிக்கை தலையங்கம் தமிழ்ச்சோலை என்று வெளியிட்டது . திருவிக அவர்கள் இயற்றிய செய்யுள் நூல் அருள்வேட்டல்.

உ வே சாமிநாதையர்

உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பது இவரின் முழுப்பெயர் ஆகும். இவரை தமிழ் தாத்தா என்று அனைவரும் அன்போடு அழைப்பர்.இவர் பிறந்த ஊர் உத்தமதானபுரம் திருவாரூர் மாவட்டம். இவரின் இயற்பெயர் வேங்கட ரத்தினம். இவரின் ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இவரின் வாழ்க்கை வரலாறு என் சரிதம் என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதினார்.

உ வே சா பதிப்பித்த நூல்கள்

எட்டுத்தொகை -8,பத்துப்பாட்டு-10, சீவக சிந்தாமணி -1,சிலப்பதிகாரம்-1, மணிமேகலை-1, புராணங்கள்-12, உலா-9, கோவை-6, தூது-6, வெண்பா நூல்கள் -13,அந்தாதி -3,பரணி-2, மும்மணிக்கோவை-2, இரட்டைமணிமாலை-2, பிற பிரபந்தங்கள் -4.

ADVERTISEMENT

உ வே சா விற்கு ஓலைச்சுவடி கொடுக்க மறுத்தவர் கொடுமுடி காரன். உ வே சா நூலகம் சென்னை பெசன்ட் நகரில் உள்ளது. நடுவன் அரசு ஊ வே சா அஞ்சல் தலையை 2006ல் வெளியிட்டு அவரை சிறப்பித்தது.

ஜி யு போப்

தமிழகத்தில் முதன்முதலில் சாந்தோமில் தனது சமயப்பணி ஆற்றினார். பின்னர் திருநெல்வேலி சாயர்புரம் சென்று அங்கு 1842 முதல் 1849 வரை சமயப்பணி ஆற்றினார். இந்தியன் சஞ்சிகை இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் தமிழ்மொழி குறித்த ஆய்வினை எழுதினார். 600 நீதிநூல் செயல்களை எடுத்து ஆய்வு செய்து பொருளுடன் கூடிய தமிழ் செய்யுள் கலம்பகம் என்ற நூலை வெளியிட்டார். தமிழ் ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில தமிழ் அகராதியை வெளியிட்டார்.1858 உதகமண்டலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தினார்.1885 முதல்1908 வரை இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் தெலுங்கு பேராசிரியராக பணிபுரிந்தார். திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போது அதனை ஆங்கிலத்தில் 1886 ஆம் ஆண்டு மொழிபெயர்த்தார். தனது 86 வயதில் 1900 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மொழிபெயர்த்தார். இறுதிகாலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு திருவருட்பயன் முதலிய நூல்களை பதிப்பித்தார்.11.02.1908 ஆம் ஆண்டு இன்னுயிரை நீத்த போ தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என எழுத வேண்டும் என்று தனது இறுதி முடிவில் எழுதி வைத்தார்.

வீரமாமுனிவர்

கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் வீரமாமுனிவர். இத்தாலியில் பிறந்தவர் இவர் பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி பிறகு தைரியநாதர் என்று மாற்றிக்கொண்டார் பின்னர் மதுரை தமிழ்ச்  சங்கத்தாரால் தூயதமிழில் வீரமாமுனிவர் என பெயர் மாற்றி அமைத்துக் கொண்டார். கிபி 1714 பாண்டிய நாட்டிற்கு வந்து சமயப் பணி புரிந்தார். இவர் சுப்பிரதீபக் கவிராயரிடம் கல்வி கற்ற இவர் தமிழ் தெலுங்கு வடமொழி ஆகிய மொழிகளைக் கற்றார்.

வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்

உரைநடை நூல்கள்

ADVERTISEMENT

பரமார்த்த குரு கதை தமிழ் முதல் நகைச்சுவை இலக்கிய நூல் இதுவாகும். வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம்,பேதகம் மறத்தல், மாமன் கதை

இலக்கண நூல்கள்

தொன்னூல் விளக்கம் இதனை குட்டி தொல்காப்பியம் என்று அழைப்பர்.செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம்.

செய்யுள் நூல்கள்

தேம்பாவணி இதில் 36 பாடல்களும் 3615 பாக்களும் உள்ளது. இது ஜோசப் வரலாற்றைக் கூறும் நூலாகும். சிந்தாமணிக்கு இணையான காப்பியமாகும். திருக்காவலூர் கலம்பகம். கித்தேரி அம்மாள் அம்மானை. அன்னையு  முங்கள் அந்தாதி. கருணாம்பாள் பதிகம். அடைக்கல மாலை.

ADVERTISEMENT

அகரமுதலி

சதுரகராதி இதுவே தமிழில் முதல் அகரமுதலி. தமிழ் இலத்தீன் அகராதி. போர்த்துகீசியம் தமிழ் இலத்தீன் அகராதி.

வீரமாமுனிவர் தமிழ் எழுத்து வடிவில் சிறந்த திருத்தம் செய்தார் குடிலுக்கு வெளியிடுவதை மாற்றி பழைய நெடில் வடிவங்கள் ஆகிய எ, ஒ என்பனவற்றை உருவாக்கி அவற்றின் கீழே சிறு கோடும் சொல்லியும் கொடுத்து ஏ, ஓ என எழுதுவதே முறை என்று திருத்தம் செய்தார் இன்று மெய்யெழுத்து மட்டும் புள்ளி பெறும் என்னும் முறை தோன்றியது. இதனால் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் 15ஆம் சூத்திரம் அடிபட்டுப் போனது.

வீரமாமுனிவர் ஐ தமிழ் உரைநடையின் தந்தை என்பர் இவரது உரைநடை பிற்கால உரைநடைக்கு வழிகாட்டி எனலாம். திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.

சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்கு சூட்டில் புகழுரை தேம்பாவணி காவலூர் கலம்பகம் கதம்ப மாலை யாக காட்சியளிக்கின்றது. தென் நூல் நூலாக விளங்குகிறது. சதுரகராதி முத்தாரம் ஆக மிளிர்கிறது.  வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்.

ADVERTISEMENT

தேவநேயப் பாவாணர்

தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர்.

மதுரையில் 5.1. 1981-ஆம் ஆண்டில் அன்று நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தேவநேயப் பாவாணரின் கருத்துக்கள்

உலகின் முதல் மொழி தமிழ். இந்திய மொழிகளுக்கு மூலமும் வெறும் தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாய் தமிழ். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறினார்.  மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகம் தமிழர் நாகரிகம் ஆகும்.  தமிழை வடமொழி வல்லாண்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறினார்.

தேவநேயப் பாவாணரின் முக்கிய நூல்கள்

ADVERTISEMENT

தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே விண், பண்டைய தமிழர் நாகரிகமும் பண்பாடும்,

இசைத்தமிழ் கலம்பகம் என்ற இசை நூலை எழுதினார்.தேவநேயப் பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது.தேவநேயப் பாவாணர் படித்த ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள முறம்பு என்ற இடத்தில் பாவாணர் கோட்டமும் அவரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்…. விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *