முதல் இந்திய விடுதலைப் போர் (1857)
இந்திய ராணுவத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கொழுப்புத் தடவிய புதிய வகை என்ஃபீல்டு தோட்டாக்கள் 1857ஆம் ஆண்டு கலகத்திற்கு உடனடி காரணமாக அமைந்தது.
இந்திய வரலாற்று ஆய்வாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் 1857ஆம் ஆண்டு நடந்த பெரும் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று குறிப்பிடுகின்றனர்.
ஆனால் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் இதனை பல்வேறு விதமாக குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர்களின் நோக்கில் முதல் இந்திய விடுதலைப் போர்
சர் ஜான் லாரன்ஸ் என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெறும் ராணுவ புரட்சி என்று குறிப்பிடுகிறார் ஏனெனில் இந்தப் போராட்டமானது பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிய நடத்தப்பட்ட சதி அல்ல என்று அவர் கருதுகிறார்.
ஆர் சி மஜும்தார் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றது என்றும்,பின்னர் அவை 1857ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்ச வடிவம் பெற்றது என்றும் குறிப்பிடுகிறார்.
வீர சாவர்க்கர் இதனை முதல் இந்திய விடுதலைப் போர் என்று குறிப்பிட்டார்.
S. N. சென் 1857ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறார்.
சீலி இக்கலகத்தை தன்னலம் உள்ள படைவீரர்கள் நாட்டுப் பற்று இன்றி மேற்கொண்டு செய்கை என்று கருதுகிறார்.
1857ஆம் ஆண்டு பெரும் கலகம் ஏற்பட காரணம்
வாரிசு இழப்பு கொள்கை யையும் அதனை பிரபு நடைமுறைப் படுத்திய விதமும் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட இந்திய ஆட்சியாளர்கள் இடையே தீராத மனக்குறை யையும் அச்சத்தையும் தோற்றுவித்தது முக்கிய காரணமாகவும் அமைந்தது.
வெல்லெஸ்லி பிரபு வின் துணைப்படைத்திட்டம் இந்திய மன்னர்களை ஆங்கிலேயருக்கு எதிராக மாற்றியது.
இராணுவ காரணங்கள்
சமய குறிகளை நெற்றியில் இட கூடாது என்று கூறியது மிக முக்கியமான காரணமாகும்.