அறநூல்கள்

ADVERTISEMENT

நாலடியார்

நாலடியார் திருக்குறளுக்கு அடுத்து வைக்கப்படும் நீதி நூலாகும்.நாலடியார் திருக்குறளின் விளக்கம் என்றும் அழைக்கப்படும். திருக்குறளை பின்பற்றி இதனை அறம், பொருள்,இன்பம் என தொகுத்தவர் பதுமனார். நாலடியார் அறம் பொருள் இன்பம் என மூன்று பகுதிகளை உடையது.  நாலடியார் 400 வெண்பாக்களை உடையது.அறத்துப்பால் 13 அதிகாரங்களையும் நூற்று முப்பது பாடல்களையும் பொருட்பால் 26 அதிகாரங்களையும் 260 பாடல்களையும் காமத்துப்பால் ஒரு அதிகாரமும் பத்து பாடல்களை ஆகியவற்றைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பாக்களாக  அமைக்கப்பட்டது. அறத்துப்பால் 13 அதிகாரங்கள்

செல்வம் நிலையாமை இளமை நிலையாமை யாக்கை நிலையாமை அறன் வலியுறுத்தல் சுய தன்மை துறவு சினமின்மை பொறையுடைமை பிறர்மனை நயவாமை ஈகைபழவினை மெய்மை தீவினையச்சம்.

பொருட்பால் 26 அதிகாரங்கள்

கல்வி மேன்மக்கள் நல்லினம் சேர்தல் தாளாண்மை நட்பாராய்தல் கூடாநட்பு அறிவின்மை மானம் அவையறிதல் பேதைமை பொதுமகளிர் குடிப்பிறப்பு பெரியாரைப் பிழையாமை பெருமை சுற்றல் நட்பிற் பிழை பொறுத்தல் அறிவுடைமை நன்றியில் செல்வம் இன்மை இரவச்சம் புல்லறிவாண்மை கீழ்மை பன்னெரி கற்புடைய மகளிர். காம நூதலியல்.

ஜி யு போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார். சங்க நூல்களுக்கு பின் தோன்றியது நாலடியார். களப்பிரர்கள் காலத்தில் தோன்றியது சமண நூல்கள். நாலடியார் நானூறு பாடல்களை உடையது என்பதால் நாலடி நானூறு என்றும் அழைப்பர். பெருமுத்தரையர் களைப் பற்றிக் குறிப்பிடுவதால் நாலடியாரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்று கூறுவர். நாலடியார் பல சமண முனிவர்கள் பாடப்பட்டது.  நாலடியார் க்கு உரை எழுதியவர் பதுமனார் மற்றும் தருமர். நாலடி நானூறு,வேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.

ADVERTISEMENT

ஏலாதி

ஏலாதி யின் ஆசிரியர் கணிமேதையார். இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலை எழுதிய எழுதியுள்ளார். கடைச்சங்க காலத்தவர். சமண மதத்தைச் சார்ந்தவர். சிறப்பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உட்பட 82 பாக்களை உடையது. ஒவ்வொரு பாடலும் ஆறு பொருளுடையது. ஏலாதி ஒரு சமண நூலாகும். முதன்மை மருந்து ஏலம். ஏறும் ஒரு பங்கு இலவங்கப்பட்டை இரண்டு பங்கு நாககேசரம் மூன்று பங்கு மிளகு 4 பங்கு திப்பிலி ஐந்து பங்கு சுக்கு 6 பங்கு ஆகிய ஆறு மருந்து பொருட்களும் சேர்ந்து ஏலாதி சூரணம் என்ற மருந்து உடற்பிணி தீர்ப்பது போல இந்த நோய் உளப்பிணிதீர்க்கும் . ஏலாதி மகடூஉ முன்னிலை அதாவது பெண்களில் விழித்து பாடுவது என்ற அமைப்பை கொண்டது. மருந்து பெயர் பெற்ற கீழ் கணக்கு நூல்களுள் இது மூன்றாவது நூலாகும்.

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான். கிபி 700 க்கு பிற்பட்ட காலத்தில் இந்த நூல் இயற்றப்பட்டது. பஞ்சு மூலம் என்பது ஐவகை வேர்களை குறிக்கும். சிறுபஞ்சமூலம் சிறுபஞ்சமூலம் என இரு வகைப்படும். கண்டங்கத்திரி வழுதுணை, சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி ஆகிய வற்றின் வேர்களே சிறுபஞ்சமூலம் எனப்படும். வில்வம் பெரும் குமிழ், தாழுதழை, பாதிரி, வாகை ஆகியவற்றின் வேர்களே பெரும் பஞ்சமூலம் ஆகும். கடவுள் வாழ்த்து உட்பட 400 வெண்பாக்களை உடையது. இதுசமண நூல் . ஒவ்வொரு           பாவிலும்  ஒற்றுமையுடைய 5 செய்திகள் கூறப்படுகின்றன. காரியாசன் கணிமேதாவியார் ஒரு சாலை மாணவர்கள்.

நான்மணிக்கடிகை

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார். விளம்பி என்பது ஊரின் பெயர் நாகனார் என்பது நூலாசிரியரின் பெயர். நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். கடிகை என்றால் அணிகலன் அல்லது துண்டம் என்று பொருள். நான்கு மணிகளைக் கொண்ட அணிகலன் போன்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு அறக்கருத்துக்கள் உள்ளது. இரு பாடல்களில் திருமாலைப் பற்றி குறிப்பிடுவதால் வைணவ நூல் என்றும் சிலர் கூறுவர் இருப்பினும் சமண கருத்துக்களையே இந்த நூல் அதிகம் கூறுகிறது. அம்மை என்னும் வனப்பை கொண்டது.

பழமொழி நானூறு

பழமொழி நானூறு ஆசிரியர் முன்றுறையரையனார். இதனை பதிப்பித்தவர் செல்வக் கேசவராய முதலியார். முன்றுறை என்பது ஊரின் பெயர். அரையன் என்பது அரசனைக் குறிக்கும் அல்லது புலவரை குறிக்கும். பழமொழிகள் 400 அடங்கிய நூலாகும். பழமொழி என்ற சொல் அகநானூறு வில் குறிப்பிடப்படுகிறது.இது ஒரு சமண நூலாகும். ஒவ்வொரு வெண்பாவும் ஈற்றடியில் ஒரு பழமொழியை கொண்டு முடியும் நாலடியார் உடன் நெருங்கிய தொடர்பு உடையது திருக்குறளின் அதிகாரங்களை போன்று அமைந்துள்ள பொற்கைப் பாண்டியன் சோழன் யானை மாலையிட்டு மன்னர் ஆக்கியதும் கரிகாலன் நரை முடித்து நீதி வழங்கியது மனுநீதிச் சோழன் தன் மகனை தேர் ஏற்றி கொன்ற செய்தியும் பாரி முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் அளித்த மையைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்படுகின்றன. அதிக தமிழக வரலாற்றைப் பற்றி கூறும் நூல். கல்வி நட்பு நல்லினம் வினைச்செயல் அரசு அமைச்சு முதலிய அதிகாரங்கள் இந்த நூலில் உள்ளது. பிரம்பூரி  என்ற நெல் வகையைப் பற்றி குறிப்பிடுகிறது. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நூல்கள் காலத்தால் முந்தியது இந்த நூலினை பழமொழி மூதுரை உலக வசனம் என்றும் அழைப்பர்.

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் மதுரை கூடலூர் கிழார். காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் மணிக்கோவை உடைய அணிகலன் ஆகும் அதுபோல் முதுமொழிகள் கோர்க்கப்பட்ட நூல் என்ற அடிப்படையில் அமைந்த நூல் இதுவே ஆகும். இந்நூலை இன்னிலைய காஞ்சிஎன்றும் கூறுவர். முதுமொழிக்காஞ்சி வெண்செந்துறை என்ற அமைப்பை கொண்டது. நிலையாமை அறிந்து முதியோர் கூற்று எனப்பொருள்படும் இது காஞ்சித் திணையில் ஒரு திணை ஆகும். காஞ்சி என்பது உலகியல் உண்மைகளைப் பற்றி கூறுவதாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இது சிறியது. இந்த நூலில் 10 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து பாடல்கள் என மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. பத்து அதிகாரங்களின் பெயர்கள். சிறந்த 10,அறிவு 10 பழியாப் பத்து, துவ்வா 10,அல்ல 10, இல்லைப் பத்து,  பொய் 10,எளிய பத்து, நல்கூர்ந்த பத்து,தண்டாப் பத்து. முதுமொழிக்காஞ்சி அறவுரைக்கோவை என்றும் அழைக்கப்படும்.

ADVERTISEMENT

திரிகடுகம்

திரிகடுகத்தில் குறிப்பிடுவது மூன்று பொருள்கள் ஆகும். திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார். இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த திருத்து என்ற ஊரைச் சார்ந்தவர். இவரை செரு அடுதோள் நல்லாதன் என்று பாயிரம் கூறுவதால் இவர் போர் வீரராக இருந்திருக்கலாம். இந்நூல் மருத்துவ பயன் தரும் நூல் ஆகும் திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு,திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும். திரிகடுகத்தை முன் மருந்து என்றும் கூறுவர். கடவுள் வாழ்த்து திருமாலுக்குரிய து எனவே இதனை இயற்றியவர் வைரவர் என்றும் கூறுவர். கடவுள் வாழ்த்து உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது இந்த நூல். பிங்கலந்தை என்ற நூலிலும் திரிகடுகத்தை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஒவ்வொரு பாவியும் முதல் மூன்று அடிகளில் மூன்று கருத்துக்களையும் நான்காவது அடியில் இம்மூன்றின் ஒற்றுமை உண்மை கூறப்படுகின்றது. ஒவ்வொரு பாடலிலும் இம்மூன்றும் அல்லது இம்மூவர் என்ற தொடர் வருகிறது.

இன்னா நாற்பது

இன்னா நாற்பதின் ஆசிரியர் கபிலர். சங்க காலத்தில் வாழ்ந்த கபிலர் வேறு. கடவுள் வாழ்த்துடன் 41 பாடல்களைக் கொண்டது இன்னாநாற்பது வாழ்க்கைக்கு துன்பம் தரும் இன்னாத பொருட்களை ஒவ்வொரு வெண்பாவில் நான்கு நான்காக கூறும் அற  நூல் இது. அம்மை வனப்பை சார்ந்தது. இந்நூலில் கூறியது கூறல் முறை காணப்படுகிறது. ஒவ்வொரு பாடல்களிலும் இன்னா என்ற தொடர் மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. துன்பம் தரும் உண்மைகள் எடுத்துக் கூற படுகிறது.

இனியவை நாற்பது

இனியவை நாற்பதின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவார். இவரின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களை உடையது. பிரம்மன் வழிபாடு பற்றி குறிப்பிடப் பட்ட ஒரே பதினெண் கீழ்க்கணக்கு நூல். வெண்பா ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு இனிய உண்மைகள் என 126 உண்மைகள் கூறப்பட்டுள்ளன. அளவியல் வெண்பாவால் ஆனது. ஊரும் கலிமா என்ற பாடல் மட்டும் பஃறொடை வெண்பா. இனிது இனிது என்பன பாடல்களில் காணப்படும்

அவ்வையார் பாடல்கள்

சங்ககால அவ்வையார். சங்க இலக்கியத்தில் 59 பாடல்கள் பாடியுள்ளார். புறநானூற்றில் அதிக பாடல்களை பாடியவர் இவரே. அதியமான் தன்னிடத்தில் கிடைக்கப்பெற்ற நீண்ட வாழ்நாள் கொடுக்கும் நெல்லிக்கனியைத் தான் உண்ணாது அவருக்கு கொடுத்தார்.

இரண்டாவது அவ்வையார்

ADVERTISEMENT

திருக்குறளைப் போன்று அவ்வையார் குறள் என்ற நூலை எழுதினார்.

மூன்றாவது அவ்வையார்

கம்பர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய பாடல்கள்.

ஆத்திச்சூடி( புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் பாரதியார் மற்றும் பாரதிதாசன்), கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ADVERTISEMENT

இந் நூல்கள் செய்யுள் வடிவில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றை விட சிறியது எனவே இவை கீழ்க்கணக்கு என பெயர் பெறுகிறது இதில் 18 நூல்கள் இடம் பெற்றுள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்கள் 11 அவை நாலடியார் நான்மணிக்கடிகை இனியவை நாற்பது இன்னா நாற்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக் காஞ்சி ஏலாதி ஆகியன ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகத்திணை நூல்கள் 6 இவை கார் நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது கைந்நிலை ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறத்திணை நூல்கள் ஒன்று அவை களவழி நாற்பது ஆகும்.

மணிமொழி கோவை என்பது நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி ஆசாரக்கோவை ஆகும். மருந்தின் பெயரால் அமைந்த நூல்கள் சிறுபஞ்சமூலம் திரிகடுகம் ஏலாதி ஆகும். சங்க மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் இவை இவை சங்க கால நூல்கள் அல்ல.

போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய அறநூல் பற்றிய வினாக்கள் மற்றும் விடைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *