அஞ்சலை அம்மாள்
1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முது நகரில் பிறந்தார்.இவர் 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது தமது வாழ்வைத் தொடங்கினார்.நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உப்புக் காய்ச்சும் போராட்டம் மறியல் போராட்டம் தனியார் அறப்போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தம்முடைய 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார்.காந்தியடிகள் சிறையில் இவர்களைப் பார்க்க வந்தபோது 9 வயதேயான அம்மாக்கண்ணு அஞ்சலை அம்மாளின் மகள் என்பதை அறிந்து மகிழ்வுற்று அச்சிறுமியை தன்னுடன் வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று லீலாவதி என்று பெயரிட்டு படிக்க வைத்தார்.காந்தியடிகள் அஞ்சலையம்மாள் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்.
அன்னிபெசன்ட் அம்மையார்
இந்து மதம் இல்லை என்றால் இந்தியா இருக்காது என்று கூறியவர் அன்னிபெசன்ட் அம்மையார்.இந்திய தேசிய காங்கிரசின் 1917 கல்கத்தா மாநாட்டின் முதல் பெண் தலைவராக அன்னிபெசன்ட் அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.காமன்வீல் என்ற பத்திரிக்கையை துவங்கியவர் அன்னிபெசன்ட் அம்மையார்.இவருக்கு துணை நின்றவர்கள் அருண்டேல் மற்றும் வாடியா.அன்னிபெசன்ட் அம்மையார் ஐரீஸ் நாட்டை சார்ந்தவர்.இந்தியாவில் தாம் தாம் என தம்மை அழைத்துக் கொண்டார். 1916 செப்டம்பர் 16 ல் சென்னையில் ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கியவர் அன்னிபெசன்ட் அம்மையார். அன்னிபெசன்ட் அம்மையார் நியூ இந்தியா என்ற நாளிதழை 14 7 1915-ல் துவங்கினார். அன்னிபெசன்ட் அம்மையார் திராவிட கலாச்சாரத்தை எதிர்த்து மையால் செல்வாக்கினை
இழந்தார்.சென்னையில் பிரம்மஞான சபை 1883ல் உருவாக்கினார். சாரண இயக்கத்தை இந்தியாவில் கொண்டு வந்தார். ஹோம் ரூல் இயக்கத்தை முதன்முதலில் துவங்கியவர் திலகர் திலகருக்கு துணையாக நின்றவர்கள் கேல்கர் மற்றும் பாப்ஸ்டியா. திலகர் மகாராஷ்டிரம் மற்றும் மத்திய மாநில பகுதிஆகியவற்றில் ஹோம் ரூல் இயக்கத்தை பிரபலப்படுத்தினார்.அன்னிபெசன்ட் அம்மையார் தமிழ்நாடு கேரளா உத்தரப்பிரதேசத்தில் ஹோம் ரூல் இயக்கத்தை பிரபலப்படுத்தினார்.ஹோம் ரூல் இயக்கம் உச்சக் கட்டத்தை அடைந்த காலம் 1917.ஹோம் ரூல் இயக்கம் வீழ்ச்சி அடைய காரணம்மாண்டகு செம்ஸ்போர்டு திட்டமும் பிராமணர் அல்லாதவர்களின் எழுச்சியும்.
அம்புஜத்தம்மாள்
வசதியான குடும்பத்தில் 1899 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் நாளில் பிறந்தார்.வை மு கோதைநாயகி அம்மாள் ருக்மணி லட்சுமிபதி முதல் அவர்களோடு நட்பு கொண்டு பெண்ணுரிமைக்கு எதிரான குரல் கொடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி விடுதலை உணர்வை ஊட்டினார். அம்புஜத்தம்மாள் காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மையின் தந்தையின் பெயர் முனுசாமி இவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்.தாயின் பெயர் மங்கலம் தாயின் ஊர் தில்லையாடி.இவர்கள் பிழைப்புக்கு சென்று நாடு தென்னாப்பிரிக்கா.தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பர்க் நாடு தென்னாப்பிரிக்கா. திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக தென்னாப்பிரிக்க அரசு அறிவித்த சட்டத்தை எதிர்த்து
வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறை தண்டனை பெற்றார். சிறை தண்டனைக்காக நீ வருகிறாயா என்று காந்தி அடிகள் வள்ளியிடம் கேட்டதற்கு இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார் என்று கூறியவர் வள்ளியம்மை. என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் கூறினார். காந்தியின் வாழ்க்கை பயணத்தில் அவர் மேற்கொண்ட சத்திரத்திற்கு முதல் களப்பலி ஒரு தமிழ் பெண் என்ற பெருமையை தில்லையாடி வள்ளியம்மைக்கு உண்டு. தன்னம்பிக்கை தான் அவரது ஆயுதம் என்ற இந்தியன் ஒப்பினியன் என்ற இதழில் காந்தியடிகள் எழுதினார்.தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்திருக்கும் என்று காந்தி அடிகள் தென்னாபிரிக்க சத்தியாகிரகம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்னுடைய ஊர் திருக்கோகர்ணம். ஸ்தீரி தர்மம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.