இந்திய அரசியல் சட்டத்தின் படி குடியரசு தலைவர் தேர்தல் முறை அவரது அதிகாரங்கள் மற்றும் பணிகள்
மத்திய நிர்வாக குழு
இந்திய குடியரசு தலைவர் துணை குடியரசு தலைவர் இந்திய பிரதமர் திரு அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய குழு மத்திய நிர்வாக குழு என அழைக்கப்படுகிறது. மத்திய நிர்வாகக் குழு பற்றி இந்திய அரசியலமைப்பில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவர்
இந்திய குடியரசுத்தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். இந்திய குடியரசு தலைவர் அரசின் தலைவர் ஆவார். இந்திய குடியரசின் மிக உயர்ந்த இடத்தை வகிக்கும் இந்திய குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்திய யூனியனின் நிர்வாகத்தை தானே நேரடியாகவோ அல்லது தனக்கு கீழ்ப்பட்ட அதிகாரிகளை கொண்டு குடியரசுத் தலைவர் என அரசியலமைப்பின் பிரிவு 53 சொல்கிறது. ஆனால் உண்மையில் அதிகாரங்கள் யாவும் பிரதமரை தலைவராகக் கொண்ட மத்திய அமைச்சரவை இடமே இருந்தன. இதனால் இங்கிலாந்து மன்னரைப் போல குடியரசுத் தலைவரும் அரசியல் அமைப்பு தலைவராக (constitutional Head )மட்டுமே உள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதிகள்
இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.அவர் 35 வயது முடித்தவர் ஆக இருத்தல் வேண்டும். அவர் மக்களவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். அவர் அரசாங்கத்தில் ஊதியம் பெரும் பதவியில் இருக்க கூடாது. இந்திய குடியரசு தலைவர் ஆவதற்கான தகுதிகள் என அரசியலமைப்புப் பிரிவு 58 சொல்கிறது.
இந்திய குடியரசு தலைவர் தேர்தல்
இந்திய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை அரசியலமைப்பின் பிரிவு 54 சொல்லப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடைபெறும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் (அதாவது நியமன உறுப்பினர்களுக்கு வாக்குஇல்லை.) ஆகியோரால் மறைமுக தேர்தல் மூலமாக ஒற்றை மாற்று வாக்கு முறையில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் இல்லை.
குடியரசுத்தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களின் சட்டமன்ற பேரவை கையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை மாற்று வாக்கு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது ரகசிய வாக்கு முறை கையாளப்படுகிறது இந்திய குடியரசுத் தலைவர் 5 ஆண்டு பதவி வகிப்பார் மீண்டும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்.
அரசியல் அமைப்பையும் மீறியதற்காக அல்லது தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக குடியரசுத் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் குடியரசு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம்.
அரசியலமைப்பை மீறிய நடத்தைக்காக குடியரசுத் தலைவர் மீது பழி கூறப்பட்டு அவரை பதவியில் இருந்து நீக்கலாம் அதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒரு அவையால் கொண்டுவரப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்ற அவையால் விசாரணை செய்யப்படும்.ஒரு ஒரு அவை குடியரசுத் தலைவரை குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர விரும்பினால் 14 நாலாவது முன்னறிவிப்பு கொடுக்கப்பட்ட பின்னரே தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியும் முன்னறிவிப்பின் மொத்த உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கையொப்பமிட்டு இருக்க வேண்டும் தீர்மானம் மொத்த உறுப்பினர்கள் குறைந்த அளவு மூன்றில் இரண்டு பகுதியினர் ஆவது ஒப்புதல் பெற வேண்டும் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒன்றினால் கொண்டுவரப்படும் குற்றச்சாட்டை மறு ஆய்வு செய்தல் வேண்டும் அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறையாது பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்படவேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
அரசியலமைப்புப் பிரிவு 56 (1)படி குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஒரே நபர் மீண்டும் இரண்டாவது பதவிக் காலமும் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் இறந்தாலோ அல்லது பதவி விலகினாலும் தேர்ந்தெடுக்கப்படும் புதிய குடியரசு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
குடியரசு தலைவரின் அதிகாரங்கள்.
நிர்வாக அதிகாரங்கள்
இந்திய குடியரசு தலைவர் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின் 52 வது பிரிவு சொல்கிறது. அவரே இந்திய குடியரசின் மற்றும் முப்படைகளின் தலைவர். நாட்டின் நிர்வாகம் அவரது பெயரால் நடைபெறும். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராகவும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களை நியமித்தார். மாநில ஆளுநர்கள் மத்திய ஆட்சிப் பகுதியின் தலைமை ஆணையர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மத்திய தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் தணிக்கைத் துறைத் தலைவர்கள் சட்டத்துறை தலைவர் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பார். அயல் நாட்டுத் தூதுவர்கள் சந்திக்கும் முதல் நபராக அவர் பெயரிலேயே அயல்நாடுகளுக்கு காண இயலாத உடன்படிக்கைகளும் செய்யப்படும்.