சிலப்பதிகாரம்

ADVERTISEMENT

சிலப்பதிகாரம்

பெயர் காரணம்

சிலம்பு + அதிகாரம் =சிலப்பதிகாரம். இதில் மகர ஒற்று வலித்தல் விகாரம் ஆயிற்று. சிலம்பினால் அதிகரித்த வரலாற்றைக் கூறுவது ஆதலின் ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரைப் பெற்றது.

இது தொடர்நிலைச் செய்யுள் எனும் வகையினைச் சார்ந்தது. தொடர்ந்து பல பாடல்களால் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கூறும் இலக்கிய  வகையே தொடர்நிலைச் செய்யுள். இதிகாசம் காப்பியங்களும் தொடர்நிலைச் செய்யுள் வகையில் அடங்கும்.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருட்கள் நான்கினை கொண்டு விளங்கும் ஐம்பெரும் காப்பியங்களுள் ( சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி  )ஒன்று சிலப்பதிகாரம்.

இது மொழிபெயர்ப்பு நூல் அன்று. தமிழ் மொழிக்கே உரிய முதல் நூல் ஆகும்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

 சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்

முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடக காப்பியம், குடிமக்கள் காப்பியம்,இயல் இசை நாடக பொருள் தொடர்நிலைச் செய்யுள்.

மூவேந்தர்களின் ஆட்சி சிறப்பு அவர்தம் நாடுகளின் பெருமை வளம் பண்டைய தமிழரின் கலை சிறப்பு பழக்க வழக்கங்கள் நாகரிகம் அரசியல் முறை ஆகியவற்றை இந்நூல் மூலம் அறியலாம்.

மூவேந்தர் மூன்று தலைநகரங்கள் இயற்கை தெய்வங்கள் மூன்று திங்கள் ஞாயிறு மழை செங்கோலின் சிறப்பு கற்பின் மேன்மை ஊழ்வினைப் பயன் என்ற மூன்று உண்மைகள் என மூன்று மூன்றாக எடுத்துக் கூறும் பெருமை படைத்த நூல் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகள் சோழர் பாண்டியர் சேரர் நாடுகளில் முறை முறையே நடைபெறுகின்றன. சோழநாட்டில் நிகழ்வின் அவற்றைப் புகார் காண்டமும்

பாண்டிய நாட்டில் நிகழ்ந்தவற்றை மதுரைக்காண்டம் சேரநாட்டில் நிகழ்வின் அவற்றை வஞ்சிக் காண்டமும் கூறுகின்றன.

ADVERTISEMENT

புகார் காண்டத்தில் பத்து காதைகள் உள்ளன. மதுரைக் காண்டத்தில் 13 காதைகள் உள்ளன. வஞ்சிக் காண்டத்தில் 7 காதைகளும் உள்ளன.  ஆக மொத்தம் 30 காதைகள் கொண்ட நூல் சிலப்பதிகாரம்.

இதில் காண்டம் என்பது பெரும் பிரிவைக் குறிக்கும். காதை என்பது கதை தழுவிய பாட்டு. காண்டத்தின் உட்பிரிவு காதை என்று பெயர். புகார் மதுரை வஞ்சி என மூன்று காண்டங்களையும் மங்கல வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தரு காதை ஈறாக முப்பது காதுகளையும் கொண்டு விளங்குகிறது.

 சிலப்பதிகார நூலின் பெருமை

இக்காப்பியம் சொல் நயம் பொருள் நயம் கொண்டது. கற்பவர் நெஞ்சை கவரும் ஒப்பற்ற காவியமாய் திகழ்வதால் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரும்  தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையும் பாராட்டியுள்ளார்.

தற்போது சிலப்பதிகார பிரச்சாரம் தொடங்கி சிலப்பதிகார ஆராய்ச்சி நூல்கள் பெரிய தோடு நூல்கள் தோன்றி வந்துள்ளன சிலப்பதிகார பட்டிமன்றம் நடைபெறுவதும் வழக்கமாகி வருகின்றன.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். பெற்றோர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்  சோழன் மகள் நற்சோணை. இவருடைய ஊர் வஞ்சிமாநகர். இவருடைய காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு இவர் சார்ந்த சமயம் சமண சமயம். இளங்கோவடிகளின் சமகால புலவர் சீத்தலைச்சாத்தனார். சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பியம் மணிமேகலை.

ADVERTISEMENT

 இளங்கோவடிகளின் வாழ்க்கை வரலாறு

இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் இளவல். தம் தமிழனுக்காக இளமையிலேயே அரசு துறந்து துறவு பூண்ட மையால் இளங்கோ அடிகள் எனப்பட்டார். இவரது இயற்பெயர் குடக்கோச் சேரல் என நூலின் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இளங்கோவடிகளின் சிறப்பு

இளங்கோவடிகள் சேரர் குடியில் பிறந்தவராயினும் சோழ பாண்டிய மன்னர்களையும் உயர்த்திக் கூறி உள்ளமையால் பரந்த எண்ணம் உடையவர் என்பது புலனாகிறது. இவர் சமண சமயத்தவர் ஆக இருப்பினும் பிற சமயத்தை வரையும் மதித்துப் போற்றியுள்ளார். பண்டைய தமிழரின் வாழ்வியலையும் தமிழ் நாட்டின் வளங்களையும் தம் நூல் வாயிலாக அறியச் செய்துள்ளார்.

 இளங்கோவடிகள் காப்பியம் படைக்க காரணம்

சேரன் செங்குட்டுவன் தன் பரிவாரங்களோடு பேரி ஆற்றங்கரையில் தங்கியிருந்தபோது குன்றக் குறவர்கள் அவனை வணங்கி அணங்கு போல்வாள் ஒருத்தி துயரமே வடிவாய் அம்மலையில் வேங்கை மர நிழலில் நின்றதையும் ஒருவன் தேவர் புடைசூழ விமானத்தில் வந்து அவளை அழைத்துச் சென்றதையும் தாம் கண்டதாக கூறினார். உடனிருந்து சீத்தலைச்சாத்தனார் அவள் யார் என்பது தனக்கு தெரியும் என்பதைக் கூறி மதுரையில் தாம் வாழ்ந்த போது தாம் நேரில் கண்ட கண்ணகி கோவலன் வரலாற்றைக் கூறினார்.

 சிலப்பதிகாரக் கதை

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவான் மகன் கோவலன். மாநாய்கன் மகள் கண்ணகி. இவர்கள் இருவரும் மணம்புரிந்து இன்பமாய் வாழ்ந்து வந்தனர். ஊழ்வினையின் காரணமாக அந்நகரில், தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்ற ஆடல் கணிகை மாதவியை சந்திக்கிறான் கோவலன். மாதவியின் பால் விருப்பம் முற்று கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்து வந்தான். இருவருக்கும் மணிமேகலை என்ற பெண் மகவு ஒன்று பிறந்தது. இந்திர விழாவின் போது மாதவி பாடிய கானல் வரிப் பாடல்களால் பிணக்கு ற்று அவள்மீது ஐயம் கொண்டு கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியிடம் வருகிறான். இழந்த செல்வத்தை ஈட்ட விரும்பி கண்ணகியுடன் மதுரை புறப்பட்டான்

சமணப் பெண் துறவி கவுந்தி அடிகளாரின் துணையுடன் இருவரும் மதுரையை அடுத்த புறஞ்சேரி தங்குகின்றனர். அங்கு ஆயர் மகளாகிய மாதிரி இடம் கவுந்தியடிகள் இருவரையும் அடைக்கலப் படுத்தினார். கண்ணகி கோவலனுக்கு சமைத்து உணவு படைத்து மகிழ்ந்தாள்.

ADVERTISEMENT

கண்ணகியின் சிலம்பு ஒன்றை விற்று வருவதற்காக மதுரை நகருக்கு சென்றான் கோவலன். அரண்மனைப் பொற்கொல்லன் ஆள் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டார். ஊழ்வினை காரணமாக பாண்டியன் அவனைக் கொன்று அச் சிலம்பு கொணர்க இங்கு என்று ஆணையிட கோவலன் கொலை செய்யப்பட்டான்.

கோவலன் கொலையுண்ட பின் ஆயர் முதுமகள் மாதரி வீட்டில் தீய நிமித்தங்கள்( தாலியில் இட்ட வெண்ணை நன்கு உறங்கவில்லை, ஆணினம் காரணமின்றி நடுங்கி கதறின, பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் இருந்து நிலத்தில் விழுந்தன ) தோன்றின. எனவே ஆயர்பாடி மக்கள் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தி திருமாலை வழிபட்டனர். குறவை யின் முடிவில் ஊர் அரவம் கேட்டு முதியவள் ஒருத்தி கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூறினாள். குரவை கூத்து நிகழும்போது ஏதோ ஒரு முன் உணர்வினால் கலங்கி இருந்தால் கண்ணகி. கணவன் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் பதைபதைத்து பொங்கி எழுந்தாள். நிலஞ்சேர் மயங்கி விழுந்தாள். பலவாறு புலம்பி அழுதாள்.

அங்கு கூடியிருந்த பெண்களிடம் கண்ணகி குரவைக்கூத்து வந்து குழுமிய பெண்களே கேளுங்கள் உங்கள் அனைவர் முன்பும் கேட்கிறேன் காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் என வினாவினாள். அவள்  கேள்விக்கு விடையாக வானொலி எழுந்தது. பெண்ணே உன் கணவன் கள்வன் அல்லன் அவ்வாறு கூறிய இவ்வுரை தி உண்ணும் என்று அக்குரல் ஒலித்தது.

 தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி மாதவி வாழ்க்கையை பாடுவது. சாதாரண குடிமகனின் வாழ்க்கையை பாடுவது. மணிமேகலை காப்பியத்தின் கதைத் தொடர்பு கொண்டிருப்பதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 போட்டித் தேர்வுகளில் சிலப்பதிகாரம்.

  •  சிலப்பதிகாரத்திற்கு பழைய உரை எழுதியவர் யார்? அரும்பத உரையாசிரியர்.
  •  சிலப்பதிகாரத்திற்கு புதிய உரை எழுதியவர் யார்? அடியார்க்கு நல்லார்
  •  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர் யார்  பாரதியார்
  •  சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் இளங்கோவடிகள்
  •  சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது மூன்று காண்டங்கள் அவை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,வஞ்சிக் காண்டம்.
  •  சிலப்பதிகாரத்தின் புகார்க்காண்டம் எந்த மூவேந்தரின் பெருமையை கூறுகிறது சோழனின் பெருமை
  •  சிலப்பதிகாரத்தின் மதுரை காண்டம் மூவேந்தர்களின் யாரைப் பற்றி குறிப்பிடுகிறது பாண்டிய மன்னரின் பெருமை
  •  சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டம் எந்த மூவேந்தர் மன்னரின் பெருமையை கூறுகிறது சேரனின் பெருமை.
  •  கோவலன் மற்றும் கண்ணகியின் தவிர பெண் சமணத் துறவியின் பெயர் என்ன கவுந்தி அடிகள்
  •  ஐம்பெரும் காப்பியங்கள் எவை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
  •  காப்பியம் என்பது என்ன காப்பியம் என்பது காவியம் என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு ஆகும். காப்பிய திற்கான இலக்கணத்தை தண்டியலங்காரம் கூறுகிறது.
  •  சிலப்பதிகாரத்தின் காலம் சிலப்பதிகாரம் கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
  •  இரட்டைக் காப்பியங்கள் எவை சிலப்பதிகாரமும் மணிமேகலையும்.
  •  தேனிலே ஊறிய செந்தமிழன் சுவை தரும் என சிலப்பதிகாரத்தை பாராட்டியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
  •  சிலப்பதிகாரத்தில் உள்ள புரட்சி என்ன புலவர்கள் அரசரை போற்றிப் பாராட்டுவது அல்லது பாடுவது இயற்கை ஆனால் மன்னர் ஒருவர் குடிமக்களில் ஒருத்தரை பற்றி பாடியது புரட்சியாகும்.
  •  காப்பியங்களில் தலையாயது எது சிலப்பதிகாரம்
  •  நீலியின் சாபத்தால் துன்பப் பட்டவள் யார் கண்ணகி
  •  கண்ணகி மற்றும் கோவலனை அடைக்கலம் பெற்ற ஆயர்குலப் பெண் யார்  மாதிரி
  •  சிலப்பதிகாரம் எந்தெந்த பாவினால் அமைந்துள்ளது ஆசிரியப்பா கொச்சகக்கலிப்பா
  •  இந்திர விழா பற்றி கூறும் நூல் எது இரட்டைக் காப்பியம்
  •  இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறப்பு என்ன தமிழில் கதை தழுவி தொடர்நிலைச் செய்யுள் களாக முதன் முதலாக தோன்றிய காவியங்கள் இவையாகும்.
  •  கோவலன் எந்தக் குடியில் பிறந்தான் வணிகர் குடியில்
  •  சிலப்பதிகாரத்தை முத்தமிழ் காப்பியம் என அழைப்பது ஏன் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் ஐயும் கொண்ட காப்பியம் ஆதலால்
  •  இளங்கோவடிகள் எந்த நாட்டு இளவரசர் ஆவார் சேர நாடு
  •  எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும் எனக் கூறுவது மணிமேகலை
  •  கோவலனிடம் மாதிரிக்காக முதல் கடிதத்தை கொண்டு சென்றது யார் வயந்தமாலை
  •  கோவலனிடம் மாதிரிக்காக இரண்டாவது கடிதம் கொண்டு சென்றது யார் கௌசிக மணி
  •  இளங்கோவடிகளின் பெற்றோர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் மகனாய் பிறந்தவர்
  •  கண்ணகி மதுரையை அழித்த பின் எங்கு சென்றாள் வேங்கை மர நிழலில் துன்பமே உருவாய் நின்றாள்
  •  கண்ணகிக்கு கோயில் கட்டியது யார் எங்கே செங்குட்டுவன் வஞ்சியில் கோயில் கட்டினான்
  •  புகார் காண்டம் எதை பற்றி கூறுகிறது கண்ணகியின் திருமணம் முதல் கோவலன் சிலம்பு விற்க மதுரை நோக்கி செல்வரை
  •  மதுரைக்காண்டம் எதைப் பற்றி கூறுகிறது கோவலன் குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்வது முதல் மதுரை எரிதல்  வரை
  •  வஞ்சிக்காண்டம் எதைப் பற்றி கூறுகிறது செங்குட்டுவன் பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டுவது
  •  இளங்கோவடிகள் அரசவை துறந்து எங்கு சென்றார் குணவாயிற் கோட்டத்து சென்று கவியரசர் ஆக விளங்கினார். சீத்தலைச் சாத்தனாரின் நண்பர் இளங்கோவடிகள்.
  •  உலக காப்பியங்களில் சிலப்பதிகாரத்திற்கு ஒப்பானது ஷேக்ஸ்பியரின் மாக்பெத்து
  •  சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் எங்கு உள்ளது கானல் வரி வேட்டுவ வரி குன்றக்குறவை   ஆய்ச்சியர்    குறவை
  •  கானல் வரி எந்த நிலமக்கள் பாடுவது நெய்தல்
  •  பாலை நில மக்களின் பாட்டு எது வேட்டுவ வரி
  •  கோவலனின் நண்பன் மற்றும் மாதவியின் வேலையால் யார் மாடலன்,கௌசிக மணி
  •  காப்பிய இலக்கணத்தைக் கூறும் நூல் தண்டியலங்காரம்
  •  நாடகத் தமிழின் நுட்பங்களை ஆசிரியர் சிலப்பதிகாரத்தில் எவ்வாறு விளக்குகிறார் இந்நூலின் அரங்கேற்று காதை மூலம்
  •  வஞ்சிக் காண்டத்தில் நடத்திய பத்தினி விழாவில் இலங்கை மன்னன் கயவாகு கலந்து கொண்டதாக கூறும் நூல் எது மகாவம்சம் கிபி இரண்டாம் நூற்றாண்டு
  •  இலங்கையின் இருபெரும் இதிகாசங்கள் மகாவம்சம் தீபவம்சம்.
  •  கண்ணகி வஞ்சின மாலை யில் எத்தனை கற்புடைய பெண்களைப் பற்றி கூறுகிறாள் ஏழு கற்புடைய பெண்கள்
  •  சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன அவை யாவை மங்கல வாழ்த்துப் பாடல் மனையறம் படுத்த காதை அரங்கேற்று காதை அந்தி மாலைச் சிறப்பு செய் காதை இந்திர இந்திர விழா ஊர் எடுத்த காதை கடலாடு காதை கானல் வரி வேனிற்காதை காணத் திறம் உரைத்த காதை நாடுகாண் காதை
  •  சிலப்பதிகாரத்தில் உள்ள மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகள் காடுகாண் காதை வேட்டுவவரி புறஞ்சேரி இறுத்த காதை ஊர்காண் காதை அடைக்கலக் காதை கொலைக்களக் காதை ஆய்ச்சியர் குரவை துன்ப மாலை ஊர்சூழ் வரி வழக்குரை காதை வஞ்சின மாலை அழற்படு காதை கட்டுரை காதை
  •  சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் யாவை குன்றக்குரவை காட்சிக் காதை கால்கோட் காதை நீர்ப்படைக்காதை நடுகற் காதை வாழ்த்துக் காதை வரந்தரு காதை.

 

ADVERTISEMENT

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *